உடனடியாக ரூ.2,000 கோடி கோரும் தமிழக அரசு: புயல், மழைக்கு 12 பேர் பலி, 2.11 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை தற்காலிகமாக சீரமைக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை  இடைக்கால நிவாரணமாக விடுவித்திடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்.

உடனடியாக ரூ.2,000 கோடி கோரும் தமிழக அரசு: புயல், மழைக்கு 12 பேர் பலி, 2.11 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்

சென்னை: தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை தற்காலிகமாக சீரமைக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை இடைக்கால நிவாரணமாக விடுவித்திடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். அதில், இந்தப் பேரழிவின் காரணமாக, 12 மனித உயிரிழப்புகளும், 2,416 குடிசைகள், 721 வீடுகள் மற்றும் 963 கால்நடைகள் இழப்புகளும் ஏற்பட்டுள்ளதோடு, 2,11,139 ஹெக்டேர் பரப்பளவிற்கு விவசாய மற்றும் தோட்டக்கலை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஃபெஞ்சல் புயல் நவ.23-ம் தேதி குறைந்த தாழ்வழுத்தப் பகுதியாக உருவெடுத்து, தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.