திருவண்ணாமலை மகாதீப மலையில் மண் சரிவில் சிக்கிய 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற 2 பேரின் உடல்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த 1-ம் தேதி இரவு முதல் கனமழை கொட்டியது. திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயர அண்ணாமலையில் இருந்து வழிந்தோடிய மழைநீரால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் கிரிவல பாதையை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. அப்போது, மகா தீபம் ஏற்றப்படும் மலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து கற்கள், ராட்சத பாறைகள் உருண்டு வந்தன. வீடுகள் முன்பு ன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் அடித்து செல்லப்பட்டு, மண்ணில் புதைந்தன. வ.உ.சி. 11-வது தெரு வில் மலைஅடிவாரத்தில் உள்ள 4 வீடுகள் மண் சரிவில் சிக்கிக் கொண்டன.