“உலகின் பழமையான மொழி தமிழ்” - தொல்காப்பியக் கருத்தரங்கில் வட மாநிலப் பேராசிரியர்கள் கருத்து
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட தொல்காப்பியம் மீதானக் கருத்தரங்கில் உலகின் பழமையான மொழி தமிழ் என்பதை, அலிகர் முஸ்லிம் பல்கலைகழகப் பேராசிரியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
புதுடெல்லி: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட தொல்காப்பியம் மீதானக் கருத்தரங்கில் உலகின் பழமையான மொழி தமிழ் என்பதை, அலிகர் முஸ்லிம் பல்கலைகழகப் பேராசிரியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசம் அலிகரில் அமைந்திருப்பது அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம். 1875-இல் சர் சையது அகமது கானால் நிறுவப்பட்ட இது, நாட்டின் பழமையான மத்தியப் பல்கலைகழகங்களில் ஒன்றாகும். இந்த பல்கலைகழகத்தின் சார்பில் அதன் வரலாற்றுத்துறை பேராசிரியர் எஸ்.சாந்தினிபீ, சென்னையின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைந்து இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தினார். இது இணையவழியில் நடைபெற்றது.