என்ன செய்ய வேண்டும் என் தலைவர்?
அரசியல் தொண்டர்கள் தங்கள் கட்சி மற்றும் தலைமையிடம் இருந்தும் எதிர்பார்ப்பது என்ன? இந்தத் தேர்தல் மற்றும் கூட்டணி பற்றி அவர்கள் நினைப்பது என்ன?
நெல்லை சங்கரமணி, அ.தி.மு.க., சேலம்.
என் உடம்புல ஓடுறதே அ.தி.மு.க. ரத்தம்னு சொல்லலாம். அவ்வளவு விசுவாசி நான். எங்க கட்சியோட பொதுச்செயலாளர் அம்மாவோட தன்னம்பிக்கையே அவங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். அதனால, இப்போதுள்ள கூட்டணியே போதும். ஆனால், எக்காரணம் கொண்டும் அம்மா பா.ஜ.க-வோடயோ காங்கிரஸோடயோ தேர்தலுக்கு முன்போ பின்போ கூட்டணி சேரக் கூடாது. அம்மா... தைரியமா களம் இறங்குங்கும்மா. நீங்கதான் பிரதமர்னு முடிவு செஞ்சுட்டுக் காத்திருக்கோம்!