எம்.ஜி.ஆருக்கு ஏன் ‘பெற்றால்தான் பிள்ளையா’ பிடிக்கும்?

தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் சேர்த்து எடுத்தார்கள். கிருஷ்ணன் - பஞ்சு இயக்கிய இந்தப் படத்தில் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, அசோகன், எம்.என்.நம்பியார், டி.எஸ்.பாலையா, தங்கவேலு என பலர் நடித்தனர்.

எம்.ஜி.ஆருக்கு ஏன் ‘பெற்றால்தான் பிள்ளையா’ பிடிக்கும்?

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு அவர் நடித்திருக்கும் அனைத்துப் படங்களுமே பிடிக்கும். ஆனால், எம்.ஜி.ஆர் நடித்து அவருக்கு அதிகம் பிடித்த படங்களில் ஒன்று ‘பெற்றால்தான் பிள்ளையா’. இதை அவரே சொல்லியிருக்கிறார். சார்லி சாப்ளினின் ‘த கிட்’ படப்பாதிப்பில் உருவான படம் இது.

தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் சேர்த்து எடுத்தார்கள். கிருஷ்ணன் - பஞ்சு இயக்கிய இந்தப் படத்தில் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, அசோகன், எம்.என்.நம்பியார், டி.எஸ்.பாலையா, தங்கவேலு என பலர் நடித்தனர். திரைக்கதை வசனத்தை ஆரூர் தாஸ் எழுதினார்.