ஓசூர் சாலையோரம் யாசகம் பெறும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளை மீட்க எழும் குரல்கள்
ஓசூர் மாநகரப்பகுதியில் சாலையோரங்களில் யாசகம் பெறும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர்: ஓசூர் மாநகரப் பகுதியில் சாலையோரங்களில் யாசகம் பெறும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய தொழில் நகரமான ஓசூரில் 3,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணி செய்து வருகின்றனர். இதில் குறிப்பாக வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து ஓசூரில் உள்ள தொழிற்சாலைகள், விவசாய பணிகள் மற்றும் பல்வேறு கைத்தொழில் செய்து வருகின்றனர்.