கடல் உயிரினங்களை பாதுகாக்க ராமேசுவரம் கடலுக்கு அடியில் செயற்கை பவளப் பாறைகள்!
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 117 வகையான பவளப்பாறைகள் உள்ளன. கடல்பசு, டால்பின், சுறா, திமிங்கலம் உள்ளிட்ட பாலுட்டிகளும் 500-க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்களும் பவளப்பாறைகளை சார்ந்து வாழ்கின்றன.
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 117 வகையான பவளப்பாறைகள் உள்ளன. கடல்பசு, டால்பின், சுறா, திமிங்கலம் உள்ளிட்ட பாலுட்டிகளும் 500-க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்களும் பவளப்பாறைகளை சார்ந்து வாழ்கின்றன.
மீன்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் விளங்கி வரும் பவளப்பாறைகள் கடலில் ஏற்பட்டுள்ள வெப்பமயமாகுதல், சூழலியல் மாற்றம், பவளப்பாறைகளை விற்பனைக்காக வெட்டி எடுப்பது, பிளாஸ்டிக் கழிவுகள், தடை வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது போன்ற காரணங்களால் அழியத் தொடங்கி உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குப் பிறகு பவளப்பாறைகள் முற்றிலும் அழிந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.