‘கணினிகளை உடைப்போம்’ - தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

கனிமவளத்துறையில் இரண்டு வாரங்களுக்குள் கணினி முறையை நடைமுறைப்படுத்தவில்லை எனில், கனிமவளத்துறை அலுவலகங்களில் கணினிகளை உடைக்கும் நூதன போராட்டம் வரும் 23-ம்தேதி நடைபெறும் என்று தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

‘கணினிகளை உடைப்போம்’ - தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: கனிமவளத்துறையில் இரண்டு வாரங்களுக்குள் கணினி முறையை நடைமுறைப்படுத்தவில்லை எனில், கனிமவளத்துறை அலுவலகங்களில் கணினிகளை உடைக்கும் நூதன போராட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கனிமவளத்துறையில் நடக்கும் நடைமுறை சிக்கல்களையும் முறைகேடுகளையும் அரசுக்கு ஏற்பட்டும் வருவாய் இழப்புகளையும் களைய வேண்டுமென்றால், ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் மின்னணு வழி கட்டண ரசீது முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் பலமுறை வலியுறுத்தியும் இந்நாள் வரையில் இந்த திட்டத்தை கனிமவளத்துறை நடைமுறைப்படுத்தவில்லை.