ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரியை நெல்லை மாநகராட்சியில் பணியமர்த்த எதிர்ப்பு
ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரியை திருநெல்வேலி மாநகராட்சியில் பணியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மனு அளித்தனர்.
திருநெல்வேலி: ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரியை திருநெல்வேலி மாநகராட்சியில் பணியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மனு அளித்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி ஆணையராக இருந்த ஜஹாங்கீர் பாஷா, கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கினார். ரயில் நிலையத்துக்கு காரில் சென்றபோது அவரை மடக்கி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தபோது கணக்கில் வராத ரூ. 11.70 லட்சம், அவரது காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.