கனமழை எதிரொலி: ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் இருந்து கைதிகள் இடமாற்றம்

கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீவைகுண்டம் மாவட்ட கிளைச் சிறையில் இருந்து 25 கைதிகள் பேரூரணி சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

கனமழை எதிரொலி: ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் இருந்து கைதிகள் இடமாற்றம்

தூத்துக்குடி: கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீவைகுண்டம் மாவட்ட கிளைச் சிறையில் இருந்து 25 கைதிகள் பேரூரணி சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. கடந்த ஆண்டை போல் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழையில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் இங்குள்ள அரசு மருத்துவமனை, கிளைச்சிறையை சூழ்ந்தது.