2 ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லை! - நிர்வாகக் குளறுபடியால் ஸ்தம்பித்து நிற்கும் பாரதியார் பல்கலை.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருக்கிறது. துணைவேந்தர் பொறுப்புக்குழுதான் இப்போது பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருகிறது.

2 ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லை! - நிர்வாகக் குளறுபடியால் ஸ்தம்பித்து நிற்கும் பாரதியார் பல்கலை.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருக்கிறது. துணைவேந்தர் பொறுப்புக்குழுதான் இப்போது பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் பொறுப்புக்குழு உறுப்பினர்களுக்கும், பதிவாளருக்கும் இடையே கருத்தொற்றுமை இல்லாத தால் பல்கலைக்கழக நிர்வாகம் ஸ்தம்பித்துக் கிடப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

பாரதி​யார்​ பல்​கலைக்​கழகத்​தின்​ கீழ்​ சுமார்​ 133 அரசு, அரசு உத​வி பெறும்​ கல்​லூரி​கள்​, தனியார்​ கல்​லூரி​கள்​ செயல்​பட்​டு வரு​கின்​றன. இங்​கு துணைவேந்​த​ராக இருந்​த காளிராஜ் 2022 அக்​டோபரில்​ ஓய்​வு பெற்​றார்​. அதன்​ பிறகு புதி​ய துணைவேந்​தர்​ நியமிக்​கப்​படாத​தால்​ கடந்​த 2 ஆண்டுகளாக பல்​கலைக்​கழக நிர்​வாகத்​தை, துணைவேந்​தர்​ பொறுப்​புக்​குழு நிர்​வகித்​து வருகிறது.