சென்னையில் ஆர்ப்பாட்டம்: தமிழிசை உள்பட பாஜகவினர் 500 பேர் கைது

வங்கதேச அரசை கண்டித்து சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழிசை உள்பட பாஜகவினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் ஆர்ப்பாட்டம்: தமிழிசை உள்பட பாஜகவினர் 500 பேர் கைது

சென்னை: வங்கதேச அரசை கண்டித்து சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழிசை உள்பட பாஜகவினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், இந்து ஆன்மிக தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர் சாய் சத்யன் உள்ளிட்ட பாஜகவினர், இந்து அமைப்பினர், ஆன்மிகவாதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, வங்கதேச அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.