செல்லூர் ராஜூ - டாக்டர் சரவணன் ஆதரவாளர்கள் இடையே மோதல்: மதுரை அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் அடிதடி!
மதுரை மாநகர அதிமுக கள ஆய்வுக்கூட்டத்தில், கள ஆய்வு மேற்கொள்ள வந்திருந்த மேலிடப் பார்வையாளர்கள் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் செம்மலை முன்பு, செல்லூர் ராஜூ மற்றும் டாக்டர் சரவணன் ஆதரவாளர்கள் இடையே அடிதடி ஏற்பட்டதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
மதுரை: மதுரை மாநகர அதிமுக கள ஆய்வுக்கூட்டத்தில், கள ஆய்வு மேற்கொள்ள வந்திருந்த மேலிடப் பார்வையாளர்கள் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் செம்மலை முன்பு, செல்லூர் ராஜூ மற்றும் டாக்டர் சரவணன் ஆதரவாளர்கள் இடையே அடிதடி ஏற்பட்டதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்துவதற்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக கள ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. மதுரை மாநகர மாவட்டத்தில் மதுரை தெற்கு, மேற்கு, வடக்கு மற்றும் மத்திய சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக கள ஆய்வுக் கூட்டம், காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் மேலிட பார்வையாளர்களாக, துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் செம்மலை கலந்து கொண்டனர்.