காட்டுக்குள் செல்ல மறுக்கும் யானைகள்... தொடர் சேதத்தால் தென்காசி விவசாயிகள் வேதனை!

தென்காசி மாவட்டம் வடகரை அருகே விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் வந்து சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

காட்டுக்குள் செல்ல மறுக்கும் யானைகள்... தொடர் சேதத்தால் தென்காசி விவசாயிகள் வேதனை!

தென்காசி: தென்காசி மாவட்டம் வடகரை அருகே விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் வந்து சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வனப்பகுதிக்குள் செல்ல மறுக்கும் யானைகளை விரட்ட முடியாமல் வனத் துறையினரும் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் வடகரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய விவசாய நிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து விவசாய பயிர்களையும், தண்ணீர் குழாய், வேலிகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளுக்கு அருகிலும் யானைகள் உலா வரத் தொடங்கியுள்ளன. வீடுகளுக்கு அருகில் உள்ள தென்னை மரங்கள், வேலிகளையும் உடைத்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர்.