கிளை அளவில் இருந்து மதிமுகவை வலுப்படுத்த வேண்டும்: தொண்டர்களுக்கு வைகோ அறிவுரை

ம​தி​முகவை கிளை அளவில் இருந்து வலுப்​படுத்த வேண்​டும் என தொண்​டர்​களுக்கு அக்கட்​சி​யின் பொதுச்செயலாளர் வைகோ அறிவுரை வழங்​கி​யுள்​ளார்.

கிளை அளவில் இருந்து மதிமுகவை வலுப்படுத்த வேண்டும்: தொண்டர்களுக்கு வைகோ அறிவுரை

சென்னை: ம​தி​முகவை கிளை அளவில் இருந்து வலுப்​படுத்த வேண்​டும் என தொண்​டர்​களுக்கு அக்கட்​சி​யின் பொதுச்​செய​லாளர் வைகோ அறிவுரை வழங்​கி​யுள்​ளார்.

சென்னை, எழும்​பூரில் உள்ள மதிமுக தலைமையகத்​தில் நேற்று முன்​தினம் இரவு நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் வைகோ பேசி​ய​தாவது: நான் கொள்​கைகளை காதலிக்​கிறவன். லட்சி​யங்​களுக்காக வாழ்​பவன். நான் திமுக​வில் 30 ஆண்டுகள் பணியாற்றி​யிருக்​கிறேன். அங்கிருந்​த​போது 27 முறை சிறைக்கு சென்​றேன். திமுக​வின் தலைவருக்கு உயிருக்கு உயிரான மெய்​காப்​பாளராக இருந்து இருக்​கிறேன். மறைந்த முன்​னாள் முதல்வர் அண்ணாதுரை​யின் முன்னிலை​யில் 1964-ம் ஆண்டு அங்கீ​காரம் பெற்​றேன். நான் செல்லாத கிராமங்கள் இல்லை.