‘முதல் பலி நாங்கள் தான்!’ - மழை நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் புலம்பல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ் சல் புயலின்போது 55 செ.மீட்டர் மழை பெய்தது. மேலும் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கரையோர பகுதிகளான அரகண்டநல்லூர், திருவெண்ணெய் நல்லூர் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

‘முதல் பலி நாங்கள் தான்!’ - மழை நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் புலம்பல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலின்போது 55 செ.மீட்டர் மழை பெய்தது. மேலும் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கரையோர பகுதிகளான அரகண்டநல்லூர், திருவெண்ணெய் நல்லூர் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கொதித்தெழுந்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தரக் கோரி நேற்று முன்தினம் அரசூர், இருவேல்பட்டு, அய்யனம் பாளையம், வி.சாத்தனூர் ஆகிய கிராமங்களில் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து திருவெண்ணெய் நல்லூர், சின்னசெவலை, அரகண்டநல்லூர், முத்தாம் பாளையம் ஆகிய கிராம மக்க ளும் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி நாள்தோறும் தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் ஆட்சியர் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, “விழுப்புரம் மாவட்டத்தில் பெருமழைக்கு 14 பேர் உயிரிழந் துள்ளனர். மாவட்டத்தில் 88 மையங்களில் 5,684 பேர் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட் டுள்ளன. மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தரைப்பாலங்கள் மழை வெள்ளம் காரணமாக மூழ்கின.