மதுரை டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக டிச.9-ல் பேரவையில் தனித் தீர்மானம்: சபாநாயகர் அப்பாவு

மதுரை மாவட்டத்தில் மத்திய அரசு அனுமதித்துள்ள டங்ஸ்டன் கனிம சுரங்கத்துக்கான உரிமையை ரத்து செய்வது குறித்த அரசின் தனித்தீர்மானத்தை தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் கொண்டு வருகிறார்.

மதுரை டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக டிச.9-ல் பேரவையில் தனித் தீர்மானம்: சபாநாயகர் அப்பாவு

சென்னை: “தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் டிச.9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும். முதல் நாளில், மாநில அரசின் அனுமதி பெறாமல், மதுரை மாவட்டத்தில் மத்திய அரசு அனுமதித்துள்ள டங்ஸ்டன் கனிம சுரங்கத்துக்கான உரிமையை ரத்து செய்வது குறித்த அரசின் தனித்தீர்மானத்தை தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் கொண்டு வருகிறார்,” என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம், இன்று சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு, ஏகமனதாக வரும் டிச.9 மற்றும் 10 ஆகிய இரண்டு தினங்கள் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.