திண்டிவனம் பேருந்து நிலையமும் ‘திகில்’ சென்டிமென்ட்டும்!
புதிதாக பேருந்து நிலையம் வந்தால் ஊருக்கு நல்லது என்பார்கள். ஆனால், திண்டிவனத்து அரசியல்வாதிகள், “திண்டிவனத்துல பேருந்து நிலையம் கட்டினால் சென்டிமென்ட்டா அது அரசியல்வாதிகளுக்கு ஆகாதுல்ல” என்று அபாயச் சங்கு ஊதிவைத்திருக்கிறார்கள்.
புதிதாக பேருந்து நிலையம் வந்தால் ஊருக்கு நல்லது என்பார்கள். ஆனால், திண்டிவனத்து அரசியல்வாதிகள், “திண்டிவனத்துல பேருந்து நிலையம் கட்டினால் சென்டிமென்ட்டா அது அரசியல்வாதிகளுக்கு ஆகாதுல்ல” என்று அபாயச் சங்கு ஊதிவைத்திருக்கிறார்கள். இதனால் தானோ என்னவோ திண்டிவனத்துக்கு புதிதாக பேருந்து நிலையம் கட்டும் திட்டம் 32 ஆண்டுகளாக ஜவ்வாக இழுபட்டுக் கொண்டிருக்கிறது.
“நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்” என 1991-ல் அப்போதைய தென்னாற்காடு மாவட்ட ஆட்சியர் கரியாலி அறிவித்தார். அப்படி அறிவித்த அவர் இடமாற்றம் செய்யப்பட்டதால் பேருந்து நிலைய பேச்சு அத்தோடு நின்றுபோனது.