‘கூலி’ பட சிறப்பு வீடியோ எப்படி? - ரஜினியின் ‘வைப்’ கூட்டும் நடனம்!
ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ‘கூலி’ படத்திலிருந்து சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை: ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ‘கூலி’ படத்திலிருந்து சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வீடியோ எப்படி? - ‘சிகிடு வைப்’ என்ற பெயர் கொண்ட பாடலின் சில காட்சிகளை மட்டும் கட் செய்து ரஜினி பிறந்த நாளுக்கு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தாளங்கள் ஒலிக்கும் டி.ராஜேந்தர் குரலில் ரஜினியின் நடனம் கவர்கிறது. குறிப்பாக நடன அசைவுகள் ‘வைப்’பை ஏற்படுத்துகின்றன. டி.ஆர் உடன் இணைந்து அறிவு, அனிருத் பாடியுள்ளனர். 56 நொடிகள் ஓடும் இந்த வீடியோ மூலம் பாடல் மீதான எதிர்பார்ப்பும், ரஜினியின் நடனத்தை காணும் ஆர்வமும் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
கூலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் ‘கூலி’. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமீர்கான், சவுபின் ஷாயிர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு மே 1-ம் தேதி ‘கூலி’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. சிகிடு வைப் வீடியோ: