விரைவில் தமிழ் கற்றுக் கொள்வேன்: சத்யதேவ்
சத்யதேவ், டாலி தனஞ்செயா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உட்பட பலர் இணைந்து நடித்துள்ள படம், ‘ஜீப்ரா’.
சத்யதேவ், டாலி தனஞ்செயா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உட்பட பலர் இணைந்து நடித்துள்ள படம், ‘ஜீப்ரா’. பான் இந்தியா முறையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. சத்யதேவ் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நடிகர் சத்யராஜ் பேசும்போது, “நான் இந்தளவு வெற்றியை எதிர்பார்த்து நடிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் நல்ல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. சத்யதேவை தமிழுக்கு வரவேற்கிறேன். அவர் தமிழ் கற்றுக்கொள்வதாகச் சொன்னார். நான் 15 ஆண்டுகளாகத் தெலுங்கில் நடிக்கிறேன். இன்னும் தெலுங்கு கற்கவில்லை. இதில் சத்யதேவ் என்னைத் தெலுங்கில் டப் செய்ய வைத்து விட்டார். இயக்குநர் ஈஸ்வர் அற்புதமாகப் படத்தைத் தந்துள்ளார்” என்றார்.