கேரள கழிவுகளை கொட்டும் மையமாக மாறி வரும் குமரி நீர்நிலைகள் - பொதுமக்கள் வேதனை

கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் இறைச்சி, மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டும் மையமாக குமரி மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், மலையோரங்கள் மாறி வருவதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். 

கேரள கழிவுகளை கொட்டும் மையமாக மாறி வரும் குமரி நீர்நிலைகள் - பொதுமக்கள் வேதனை

நாகர்கோவில்: கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் இறைச்சி, மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டும் மையமாக குமரி மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், மலையோரங்கள் மாறி வருவதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் அருகாமையில் உள்ள கேரள மாநிலத்திற்கு குமரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி, மானிய விலை மண்ணெண்ணெய், கனிமவளங்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் சோதனை சாவடிகள் அமைத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்பும் இத்தகைய கடத்தல்களை கட்டுபடுத்த முடியவில்லை. இந்த நிலையில், கேரளாவில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், பொது சுகாதாரத்தை பேணவும் அங்குள்ள அரசு உரிய கண்டிப்புடனும் கட்டுப்பாட்டுடனும் கூடிய விதிமுறைகளை வகுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள கோழி, மீன், மற்றும் இறைச்சி, மருத்துவ, எலக்ட்ரானிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளும் அங்கு கொட்டப்படுவதில்லை.