சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு ஜன.27-க்கு ஒத்திவைப்பு
சென்னையை சேர்ந்த யூடியுபர் சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு ஜன.27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை: சென்னையைச் சேர்ந்த யூடியுபர் சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு ஜன.27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த யூடியுபர் சவுக்கு சங்கர், தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது கஞ்சா வைத்திருந்ததாக பி. சி பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தபோது சவுக்கு சங்கர் பல முறை ஆஜராகவில்லை. இதனால் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.