ஹைதராபாத், பெங்களூருக்கு புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை துவக்கம்
புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் மீண்டும் விமான சேவையை துணைநிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் மீண்டும் விமான சேவையை துணைநிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நிறுவனங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் மூலம் விமானம் இயக்கப்பட்டு வந்தது. விமானத்தில் போதிய பயணிகள் பயணிக்காததால் கடந்த மார்ச் 30-ம் தேதியுடன் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, கடந்த 8 மாதங்களாக புதுவையில் இருந்து விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.