தேனியில் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை தடுக்க போலீஸ் கண்காணிப்பு
கனமழையினால் மாவட்டத்தில் உள்ள பல நீராதாரங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே இப்பகுதிக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும் போலீஸார் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
போடி: கனமழையினால் மாவட்டத்தில் உள்ள பல நீராதாரங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இப்பகுதிக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும், போலீஸார் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சிற்றாறுகள் உருவாகி ஆங்காங்கே உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மூலவைகை மற்றும் வைகையின் துணை ஆறுகளான வராகநதி, கொட்டக்குடி, பாம்பாறு உள்ளிட்டவற்றிலும் தண்ணீர் அதிகளவில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாய் உயர்ந்து வருகிறது.