ரெட் அலர்ட்: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம், புதுவை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த இரு நாட்கள் விடுமுறை விடப்பட்டது
புதுச்சேரி: ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம், புதுவை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் சின்னம் காரணமாக புதுச்சேரியில் கடந்த இரு நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் ரெட் அலர்ட் விடப்பட்டதால் கல்வியமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், "கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு (நவ.29) நாளையும், (நவ.30) நாளை மறுநாளும் இரு தினங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது" என்று அறிவித்தார்.