சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர் சுனில்குமார் நியமன எதிர்ப்பு வழக்கு: ஐகோர்ட் உத்தரவு

சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர் சுனில்குமார் நியமன எதிர்ப்பு வழக்கு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.