“சுரங்க விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம்” - அன்புமணி குற்றச்சாட்டு

டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் வேளையில், என்எல்சி சுரங்க விரிவாக்கத் திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் இரட்டை வேடம் தெரியவந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

“சுரங்க விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம்” - அன்புமணி குற்றச்சாட்டு

திருவண்ணாமலை: டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் வேளையில், என்எல்சி சுரங்க விரிவாக்கத் திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் இரட்டை வேடம் தெரியவந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

திருவண்ணாமலை, செங்கம் சாலையில் வரும் 21-ம் தேதி தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு நடைபெற உள்ள இடத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (டிச.14) பார்வையிட்டு, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் திருவண்ணாமலையில் வரும் 21-ம் தேதி மிகப்பெரிய மாநாடு நடைபெற உள்ளது.