சென்னையில் தெருநாய்களை கட்டுப்படுத்த 3 இடங்களில் ரூ.4 கோடியில் நாய் இன கட்டுப்பாடு மையங்கள்

சென்னையில் தெருநாய்களை கட்டுப்படுத்த ரூ.4 கோடியே 17 லட்சத்தில் 3 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாடு மையங்களை அமைக்க மாநகராட்சி மன்றத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் தெருநாய்களை கட்டுப்படுத்த 3 இடங்களில் ரூ.4 கோடியில் நாய் இன கட்டுப்பாடு மையங்கள்

சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சி பாகுபாடின்றி கவுன்சிலர்கள் பலர், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் எங்களின் புகாரை கண்டுகொள்வதில்லை. சரியான பயனாளிகளுக்கு சாலையோர வியாபாரிக்கான அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரம் அனுமதிக்கப்பட்ட பகுதி, அனுமதிக்கப்படாத பகுதி குறித்து, கவுன்சிலர்களுடன் கலந்தாலோசித்து மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும்.