சென்னை மாநகராட்சி சார்பில் 1,000 மாணவர்களுக்கு மஞ்சப்பை விநியோகம்

சென்னை மாநகராட்சி சார்பில் திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி  மேல்நிலைப் பள்ளியில் 1000 மாணவ, மாணவிகளுக்கு இன்று (செப்.6) மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.

சென்னை மாநகராட்சி சார்பில் 1,000 மாணவர்களுக்கு மஞ்சப்பை விநியோகம்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 1000 மாணவ, மாணவிகளுக்கு இன்று (செப்.6) மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.

சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்ச்சி திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் பங்கேற்று, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்திருப்பது, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகைப் பிரித்து வழங்கும் முறைகள், காற்று மாசை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து காணொளி காட்சி மூலமாக விளக்கினார்.