சென்னை விமான நிலையத்தில் ஒரேநாளில் 13 விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி
இந்த 13 விமானங்களில் 9 விமானங்கள் நிர்வாகக் காரணம், 2 விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு, 2 விமானங்கள் மோசமான வானிலையால் ரத்து செய்யப்பட்டதாக சென்னை விமான நிலையம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரேநாளில் 7 புறப்பாடு, 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு கொச்சி செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், காலை 10.45 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 10.50 மணிக்கு கர்நாடக மாநிலம் சிவமுகா செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12 மணிக்கு மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12.35 மணிக்கு சிலிகுரி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், பகல் 1.55 மணிக்கு இலங்கை யாழ்ப்பாணம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10.40 மணிக்கு கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் என 7 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல், சென்னைக்கு காலை 10.20 மணிக்கு வரவேண்டிய கொச்சி ஸ்பைஸ்ஜெட் விமானம், பகல் 1.45 மணி - திருவனந்தபுரம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மாலை 3 மணி - மதுரை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 5.10 மணி - யாழ்ப்பாணம் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 5.55 மணி - கர்நாடக மாநிலம் சிவமுகா ஸ்பைஸ்ஜெட் விமானம் மற்றும் இரவு 10.05 மணிக்கு வரவேண்டிய கொல்கத்தா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் என 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.