தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு: தி.வேல்முருகன் மீது பாஜக புகார்

எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் கலந்துகொண்டு, இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை இந்திய தேசிய ராணுவத்தோடு ஒப்பிட்டு பேசியுள்ளார்.

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு: தி.வேல்முருகன் மீது பாஜக புகார்

சென்னை: இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை ஆதரித்துப் பேசியதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் சையது இப்ராஹிம் நேற்று புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் கலந்துகொண்டு, இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை இந்திய தேசிய ராணுவத்தோடு ஒப்பிட்டு பேசியுள்ளார். அந்த அமைப்பை ஆதரித்து பேசுவதன் மூலம், இளைஞர்களை மூளைச்சலவை செய்து மத்திய அரசை எதிர்ப்பதற்காக ஆள் திரட்டுகிறார்.