‘புயல் காலத்திலும் தலைநகர் சென்னை இப்போது நிம்மதியாக இருக்கிறது’ - முதல்வர் ஸ்டாலின்
“அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. புயல் காலத்தில் தலைநகர் சென்னை இப்போது நிம்மதியாக இருக்கிறது.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: “அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. புயல் காலத்திலும் தலைநகர் சென்னை இப்போது நிம்மதியாக இருக்கிறது.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான "ஃபெஞ்சல் புயல்" காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததைத் தொடர்ந்து, உடனடியாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று (30.11.2024) சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டார்.