ஊத்தங்கரையில் 50 செ.மீ, கெடாரில் 42 செ.மீ - ஒரே நாளில் எங்கெல்லாம் அதிக மழைப் பதிவு?

கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 50 செ.மீ. மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஊத்தங்கரையில் 50 செ.மீ, கெடாரில் 42 செ.மீ - ஒரே நாளில் எங்கெல்லாம் அதிக மழைப் பதிவு?

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 50 செ.மீ. மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக வடதமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென்தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துள்ளது.