புதுச்சேரி, காரைக்காலில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5,000 - ஃபெஞ்சல் புயல் நிவாரணம் அறிவிப்பு
புயல், மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் ஆகிய பகுதிகளில் உள்ள 3.54 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் விரைவில் செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். மேலும் உயிரிழப்பு, வீடு பாதிப்பு, கால்நடை இழப்பு என அனைத்து நிவாரணத்துக்கும் ரூ. 210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
புதுச்சேரி: புயல், மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள 3.54 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் விரைவில் செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். மேலும் உயிரிழப்பு, வீடு பாதிப்பு, கால்நடை இழப்பு என அனைத்து நிவாரணத்துக்கும் ரூ. 210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி இன்று கூறியதாவது: புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பொழிந்துள்ளது. கிட்டத்தட்ட 50 செமீ மழை பதிவானது. முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு வழங்கினோம், எம்எல்ஏக்களும் அந்தந்த பகுதிகளில் உணவு வழங்கினர். வருவாய்துறை சார்பில் 85 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தரப்பட்டன.