வங்கதேசத்தில் துறவியை விடுதலை செய்ய வலியுறுத்தி டிச.4-ல் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

வங்கதேசத்தில் கைது செய்யப்பட்ட இஸ்கான் அமைப்பை சேர்ந்த ஆன்மிகத் துறவி சின்மயி கிருஷ்ணதாஸை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் டிசம்பர் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.

வங்கதேசத்தில் துறவியை விடுதலை செய்ய வலியுறுத்தி டிச.4-ல் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: வங்கதேசத்தில் கைது செய்யப்பட்ட இஸ்கான் அமைப்பை சேர்ந்த ஆன்மிகத் துறவி சின்மயி கிருஷ்ணதாஸை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் டிசம்பர் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் இன்று (டிச.2) திருப்பூரில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: "இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானை பிரித்து வங்கதேச நாட்டை உருவாக்கினார். அந்த நாட்டின் பிரதமராக இருந்த சேக் ஹசீனா, மாணவர்கள் போராட்டத்தால் சமீபத்தில் அந்த நாட்டில் இருந்து விரட்டப்பட்டார். இஸ்கான் அமைப்பை சேர்ந்த ஆன்மிகத் துறவி சின்மயி கிருஷ்ணதாஸ், இந்துக்களை ஒருங்கிணைக்கும் வேலையை செய்து வந்தார். இந்நிலையில், தேச துரோக வழக்கில் அந்த நாட்டில் கிருணதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.