வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட படகுகள்: முற்றிலும் சேதமடைந்த புதுச்சேரி அரசு படகு குழாம்

சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் நோணாங்குப்பம் அரசு படகு குழாம் புயல் மழையால் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. வெள்ளத்தில் பல லட்சம் மதிப்பிலான படகுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட படகுகள்: முற்றிலும் சேதமடைந்த புதுச்சேரி அரசு படகு குழாம்

புதுச்சேரி: சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் நோணாங்குப்பம் அரசு படகு குழாம் புயல் மழையால் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. வெள்ளத்தில் பல லட்சம் மதிப்பிலான படகுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளம் வடிந்த பிறகே முழு சேதமதிப்பு தெரியும் என துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா நகரான புதுச்சேரியில் புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் நோணாங்குப்பம் படகு துறை நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் புதுச்சேரி - கடலூர் சாலையில் அமைந்துள்ளது. படகு குழாமில் இருந்து படகுகளில் பாரடைஸ் பீச் என அழைக்கப்பட்டுள்ள இந்த படகுத்துறைக்கு ஸ்பீட் போட், மோட்டார் போட், பெடல் போட், ஃபெராரி ரைட் என பல வகையான படகுகளில் பயணிகளை அழைத்து செல்வர். இங்கு படப்பிடிப்புகளும் நடப்பது வழக்கம்.