சென்னை | 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிடம் மாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிடம் மாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவு: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த ராஜீவ்குமார், ஆவின் விஜிலென்ஸ் டிஜிபியாகவும், ஊர்க்காவல் படை மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு பிரிவு டிஜிபி கே.வன்னிய பெருமாள் ரயில்வே பாதுகாப்பு பிரிவு டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.