‘2 ஆயிரம் பேர் வசிக்கும் காட்டாங்குளத்தூர் செந்தமிழ் நகரில் ரேஷன் கடை இல்லை!’

ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் வசிக்​கும் காட்​டாங்​குளத்​தூர் செந்​தமிழ்​நகர் பகுதி​யில் புதிதாக ரேஷன் கடை அமைக்​கப்​படுமா என்று அப்பகுதி பொது​மக்கள் நீண்ட நாட்​களாக எதிர்​பார்க்​கிறார்​கள்.

‘2 ஆயிரம் பேர் வசிக்கும் காட்டாங்குளத்தூர் செந்தமிழ் நகரில் ரேஷன் கடை இல்லை!’

ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் வசிக்​கும் காட்​டாங்​குளத்​தூர் செந்​தமிழ்​நகர் பகுதி​யில் புதிதாக ரேஷன் கடை அமைக்​கப்​படுமா என்று அப்பகுதி பொது​மக்கள் நீண்ட நாட்​களாக எதிர்​பார்க்​கிறார்​கள். சென்னை தாம்​பரத்தை அடுத்த மறைமலைநகர் நகராட்​சிக்கு உட்பட்ட பகுதி காட்​டாங்​குளத்​தூர் செந்​தமிழ் நகர். பொத்​தேரி - காட்​டாங்​குளத்​தூர் இடையே ஜிஎஸ்டி சாலை​யில் இருந்து சுமார் ஒருகிலோ மீட்டர் தொலை​வில் அமைந்​துள்ளது. செந்​தமிழ் நகர் மற்றும் அதன் அருகேயுள்ள விஜிஎன் நகர் பகுதி​யில் 500-க்​கும் மேற்​பட்ட வீடு​கள், அடுக்​கு​மாடி குடி​யிருப்புகள் உள்ளன.

அரசு மற்றும் தனியார் ஊழியர்​கள், தொழில் செய்​வோர், தொழிலா​ளர்கள் என ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் வசிக்​கின்​றனர். சென்னை நகர வாசிகள் பலர் அமைதி​யான, நெருக்கடி இல்லாத, காற்​றோட்டம் மிக்க பகுதி என கருதி தொடர்ந்து இப்பகு​தி​யில் குடியேறிய வண்ணம் உள்ளனர்.