சொத்து வரி உயர்வால் மதுரை மாநகராட்சிக்கு நெருக்கடி: திமுக, கூட்டணி கட்சிகளுக்கும் பின்னடைவு

6 சதவீதம் சொத்து வரி உயர்வால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பும் நிலையில், அடுத்ததாக ஆட்சியரை சந்தித்து வரி உயர்வை ரத்து செய்ய கோரி முறையிடத் தொடங்கியுள்ளனர். இதனால் மாநகராட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பி, எம்எல்ஏ, மற்றும் கவுன்சிலர்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

சொத்து வரி உயர்வால் மதுரை மாநகராட்சிக்கு நெருக்கடி: திமுக, கூட்டணி கட்சிகளுக்கும் பின்னடைவு

மதுரை; 6 சதவீதம் சொத்து வரி உயர்வால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பும் நிலையில், அடுத்ததாக ஆட்சியரை சந்தித்து வரி உயர்வை ரத்து செய்ய கோரி முறையிடத் தொடங்கியுள்ளனர். இதனால் மாநகராட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பி, எம்எல்ஏ, மற்றும் கவுன்சிலர்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகராட்சியில் கடந்த 2 ஆண்டுக்கு முன்புதான் சொத்து வரி 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, தற்போது மீண்டும் 6 சதவீதம் சொத்து வரியை மாநகராட்சி உயர்த்தியுள்ளது. மாநகராட்சி பழைய 72 வார்டுகளில் வசிப்பவர்கள் மட்டுமே தொடர்ந்து மாநகராட்சி சொத்து வரி உயர்வால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புறநகர் 28 வார்டுகளை சேர்ந்த மக்களுக்கு தற்போது வரை பழைய நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி சொத்து வரிகளே வசூல் செய்யப்படுகிறது.