ஜன.13-ல் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025’ முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது
‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025’ நிகழ்ச்சியை ஜன.13-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025’ முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கலைப் பண்பாட்டுத் துறை சார்பில், சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது. அதற்கான சிறந்த கலைஞர்களை 7 மண்டலங்களில் இருந்து தேர்வு செய்து, மாநில அளவில் அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.