டானா புயல் காரணமாக நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

டானா புயல் சின்னம் காரணமாக நாகை - இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது. வங்கக்கடலில் கடந்த 21ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று புயலாக மாறியது

டானா புயல் காரணமாக நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

நாகப்பட்டினம்: டானா புயல் சின்னம் காரணமாக நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது.

வங்கக் கடலில் கடந்த 21-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு 'டானா' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று தீவிர புயலாக உருவெடுத்து வடக்கு ஒடிசா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.