டெல்டா பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து நீர் திறப்பு 3,000 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்டா பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து நீர் திறப்பு 3,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்/தருமபுரி: காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு கடந்த சிலநாட்களாக நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 18,384 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 15,929 கனஅடியாக குறைந்தது.