தமிழகத்தில் சீசன் முடிந்தும் காற்றாலைகளில் இருந்து கூடுதல் மின்சாரம்
தமிழகத்தில் சீசன் முடிந்த பிறகும் காற்றாலைகளில் இருந்து கூடுதல் மின்சாரம் கிடைப்பதால், அனல் மின் உற்பத்தியை மின்வாரியம் குறைத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் சீசன் முடிந்த பிறகும் காற்றாலைகளில் இருந்து கூடுதல் மின்சாரம் கிடைப்பதால், அனல் மின் உற்பத்தியை மின்வாரியம் குறைத்துள்ளது.
தமிழகத்தில் 9,150 மெகாவாட் திறனில் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான காற்றாலை மின்நிலையங்கள் உள்ளன. அந்த நிறுவனங்கள் இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்பனை செய்வதுடன், சொந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தி வருகின்றன.