திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 3.5 கோடி சொத்துகள் மீட்பு
சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை விவரம்: முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.