திருச்சியில் மது, பணம் விநியோகம் - ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் ‘சம்பவங்கள்’
ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்க நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இத்தேர்தலில் தொழிற்சங்கங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது
திருச்சி: ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்க நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தத் தேர்தலில் தொழிற்சங்கங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வாக்காளர்களை கவர பணம், மது, பிரியாணி விநியோகம் என திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம், பொன்மலை ஆகிய பகுதிகள் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்திய ரயில்வேயில் 12.20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ரயல்வே ஊழியர்கள் சம்பளம், போனஸ் உள்ளிட்ட பணம் பலன்கள், பிரச்சினைகள் குறித்து தேர்தலில் அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் தான் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவர். இந்திய ரயில்வேயில் முதல் முறையாக கடந்த 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது.