திருச்செந்தூர் கோயிலில் யானை தெய்வானைக்கு கஜ பூஜை

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானைக்கு கஜ பூஜை நடந்தது. பின்னர் சிறிது நேரம் நடைப் பயிற்சி மேற்கொண்டது.

திருச்செந்தூர் கோயிலில் யானை தெய்வானைக்கு கஜ பூஜை

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானைக்கு கஜ பூஜை நடந்தது. பின்னர் சிறிது நேரம் நடைப் பயிற்சி மேற்கொண்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த மாதம் 18-ம் தேதி யானை தெய்வானை (26) தாக்கியதில் பாகன் உதயகுமாரும், அவரது உறவினர் சிசுபாலனும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் வனத்துறை, கால்நடைத்துறையின் தீவிர கண்காணிப்பில் யானை இருந்து வருகிறது. கடந்த 6-ம் தேதி யானையை பரிசோதனை செய்த மாவட்ட வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், யானை இயல்பு நிலைக்கு முழுவதும் திரும்பிவிட்டதால் பகல் நேரங்களில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்ல பாகனிடம் அறிவுறுத்தினார்.