திருவள்ளூரில் 283 பெண் காவலர்களுக்கு பயிற்சி துவக்கம்
தமிழ்நாட்டில் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் 8 காவல் பயிற்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன
திருவள்ளூர்: தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் 8 காவல் பயிற்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் மொத்தம் 2665 பேர் ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படை ஆகிய பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று முன்தினம் அடிப்படை பயிற்சிகள் துவங்கியது.
இதில் திருவள்ளூர் மாவட்டம் கனகவல்லிபுரம் கிராமத்தில் இயங்கி வரும் திருவள்ளூர் காவல் பயிற்சி பள்ளியில் இந்த ஆண்டு ஆயுதப்படை இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான அடிப்படை பயிற்சிக்காக இரண்டாம் நிலை பெண் காவலர்களாக திருவண்ணாமலையில் 45, விழுப்புரத்தில் 44, கடலூரில் 36, வேலூர் மற்றும் புதுக்கோட்டையில் தலா 24, ராமநாதபுரத்தில் 22, தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் தலா 19, அரியலூரில் 14, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, கரூரில் தலா 11, மயிலாடுதுறையில் 9, திருச்சியில் 8, பெரம்பலூரில் 3 என மொத்தம் 300 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 283 பேர் பயிற்சி பெற்று வருகி்னறனர்.