அரசியல்வாதிகளில் ‘ஈகோ’ - ஆவடியில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாத அம்மா திருமணம் மண்டபம்!

இந்த மண்டபத்​தில் 75 நான்கு சக்கர வாகனங்​களும், 100 இருசக்கர வாகனங்​களும் நிறுத்தக்கூடிய அளவுக்கு இடவசதி உள்ளது. மண்டபத்​துக்​குள் கண்காணிப்பு கேமராக்​கள், சூரியஒளி மின்​சாரம் தயாரிப்​ப​தற்கான வசதிகள் என தனியார் மண்டபத்​தையே மிஞ்​சும் அளவுக்கு வசதிகள் செய்​யப்​பட்​டுள்ளன.

அரசியல்வாதிகளில் ‘ஈகோ’ - ஆவடியில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாத அம்மா திருமணம் மண்டபம்!

சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா திருமண மண்டபம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் 2018-ம் ஆண்டு 29,497 சதுர அடி பரப்பளவில் திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 3 அடுக்​குகள் கொண்ட இந்த மண்டபத்​தின் முதல் தளத்​தில் நவீன சமையலறை வசதி​யுடன் 400 பேர்உணவருந்​தும் கூடமும், 2-ம் தளத்​தில் 700 பேர் அமரும் வகையில் குளிர்​சாதன வசதி​யுடன் கூடிய மணமேடை​யும், 3-ம் தளத்​தில் மணமகன், மணமகள் ஓய்வு அறை ஆகியவை அமைக்​கப்​பட்​டுள்ளன.

மேலும், இந்த மண்டபத்​தில் 75 நான்கு சக்கர வாகனங்​களும், 100 இருசக்கர வாகனங்​களும் நிறுத்தக்கூடிய அளவுக்கு இடவசதி உள்ளது. மண்டபத்​துக்​குள் கண்காணிப்பு கேமராக்​கள், சூரியஒளி மின்​சாரம் தயாரிப்​ப​தற்கான வசதிகள் என தனியார் மண்டபத்​தையே மிஞ்​சும் அளவுக்கு வசதிகள் செய்​யப்​பட்​டுள்ளன. பொது​மக்கள் அனைவரும் நியாயமான கட்ட​ணத்​தில் திரு​மணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்​சிகளை நடத்த நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் கட்ட​ணமாக நிர்​ண​யிக்​கப்​பட்​டது. ஆனால், மண்டபம் கட்டி முடிக்​கப்​பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்​கப்​படவில்லை. மேலும், இந்த மண்டபம் ஆவடி ரயில், பேருந்து நிலையம் மற்றும் மார்க்​கெட்டுக்கு அருகில் இருப்​ப​தால் பொது​மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.