தமிழகத்தில் பேருந்து நிலையங்களுக்குள் மினி பஸ் வந்து செல்ல இனி தடை!
மினி பேருந்துகளுக்கான புதிய விதிகளின்படி பேருந்து நிலையங்களுக்குள் மினி பேருந்து வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: மினி பேருந்துகளுக்கான புதிய விதிகளின்படி பேருந்து நிலையங்களுக்குள் மினி பேருந்து வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது.