உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மத்திய அரசு விளக்கம்
உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் துவக்க ஏலம் கேட்க யாருமில்லை என மக்களவையில் தகவல் வெளியாகி உள்ளது. இதை டி.ரவிக்குமார் எம்.பி. கேள்விக்கான பதிலில் விமானப் போக்கு வரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹல் தெரிவித்துள்ளார்
புதுடெல்லி: உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் துவக்க ஏலம் கேட்க யாருமில்லை என மக்களவையில் தகவல் வெளியாகி உள்ளது. இதை டி.ரவிக்குமார் எம்.பி. கேள்விக்கான பதிலில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று மக்களவையில் விழுப்புரம் எம்.பி.யான டி.ரவிகுமார் எழுப்பிய கேள்வியில், ‘உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைக்கவும் உடான் திட்டத்தின் கீழ் இணைப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அங்கு இருக்கும் விமான ஓடுபாதையைப் பயன்படுத்தி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தின் இப்போதைய நிலை என்ன? இதன் விமான ஓடுபாதையை உடான் திட்டத்தின் கீழ் இணைப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா ?’ எனக் கேட்டிருந்தார்